கொரோனா தடுப்பூசி போட்டவருக்கு ஏற்பட்ட நிலை!

உலகெங்கும் பெரும் கோரத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா பல லட்ச உயிர்களை காவு வாங்கியுள்ளது. கொரோனாவிற்கான தடுப்பூசியை எதிர்பார்த்து உலக மக்கள் நெகிழ்ச்சி கண்ணீருடன் காத்துகொண்டு இருக்கின்றனர்.

பாரத் பயோடெக்சின் கோவாக்சின், ஆக்ஸ்போர்டு பல்கலை. கோவிட்ஷீல்டு, ஜடாஸ் கேடிலாவின் ஜைக்கோவ்-டி, ரஷியா சப்பிரல் கமலேயா போன்ற பல ஆராய்ச்சிகளின் முடிவுகள் சாதகமாக அமைந்துள்ளதால், மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர பலத்த போட்டியானது நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஆக்ஸ்போர்டு தடுப்பூசி உள்ளிட்ட பல தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனையில் உள்ளது.

இந்த நிலையில், பிரிட்டனில்‌ கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபருக்கு தீவிர எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியதால்‌ ஆக்ஸ்போர்டூ பல்கலைக்கழகம்‌, ஆஸ்ட்ராஜெனிகா (astrazeneca)நிறுவனம்‌ கூட்டாக உருவாக்கிய கொரோனா தடுப்பூசியின்‌ இறுதிக்கட்ட பரிசோதனை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆக்ஸ்போர்டூ பல்கலைக்கழகம்‌, ஆஸ்ட்ராஜெனிகா(astrazeneca) நிறுவனம் கூட்டாக தயாரித்த கொரோனா தடுப்பூசி பிரிட்டன்‌ உள்பட பல்வேறு இடங்களில்‌ பரிசோதனை நடைபெறுவதாக தகவல்கள்‌ வெளியாகி வந்தன. இந்நிலையில்‌ பாதுகாப்பு காரணத்துக்காக தடூப்பூசி சோதனை நிறுத்தி வைக்கப்பட்டூள்ளது என ஆஸ்ட்ராஜெனிகா செய்தித்‌ தொடர்பாளர்‌ தெரிவித்ததாக ஸ்டாட்‌ நியூஸ்‌ என்ற இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.