தூக்கில் தொங்கவிடப்பட்ட காதலி..கதறும் காதலன்…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் தோட்டக்காணியா கிராமத்தை சார்ந்தவர் மீனாட்சி (வயது 30). இவர் விவசாயத்துறை அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இதுமட்டுமல்லாது அரசு பணிக்காகவும் போட்டித்தேர்வுகளை எழுதி வந்த நிலையில், மீனாட்சி மற்றொரு சமூகத்தை சார்ந்த வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், அவரையே திருமணம் செய்ய முடிவெடுத்திருந்த நிலையில், இந்த திருமணத்திற்கு மீனாட்சியின் பெற்றோர் ஒத்துழைக்கவில்லை. மேலும், அவரை கொடுமைப்படுத்தி வந்த நிலையில், உறவுக்கார வாலிபருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து மீனாட்சி வீட்டினை விட்டு வெளியேறி, தனது சகோதரியின் இல்லத்தில் தங்கியிருந்த நிலையில், பெற்றோர்கள் பயங்கர நெருக்கடி கொடுத்து வந்துள்ளானார். இதனால் மனமுடைந்து இருந்த மீனாட்சி அலைபேசியில் வீடியோ பதிவு செய்து காவல் கண்காணிப்பாளருக்கும், பெண்கள் நலத்துறையினருக்கும் அனுப்பியுள்ளார்.

இது குறித்த வீடியோவின் அடிப்படையில் காவல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், பேச்சுவார்த்தையில் சம்மதம் தெரிவித்துவிட்டு சென்றுள்ளனர். இந்த நிலையில், மீனாட்சி நேற்று வீட்டில் தூக்கிட்டு பிணமாக தொங்கியுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.