ஐபிஎல் 2020: சென்னை அணி பங்கேற்கும் லீக் போட்டிகள் அட்டவணை!

2020 ஐபிஎல் தொடருக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அட்டவணைப்படி, முதல் போட்டி வரும் 19ஆம் தேதி இரவு 07.30 மணி அளவில் ஆரம்பமாக உள்ளது. இந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதவுள்ளன. மொத்தம் 56 லீக் போட்டிகள் இந்த ஐபிஎல் தொடரில் நடக்க உள்ளது. பெரும்பாலான போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 7:30 அளவிற்கு தொடங்க உள்ளது.

மொத்த 56 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணியும் 14 லீக் ஆட்டங்கள் விளையாட உள்ளன. இந்த ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி போட்டியிடும் அட்டவணை மட்டும் இங்கு காண்போம்.

முதல் போட்டியாக வரும் 19ஆம் தேதி 7:30 மணிக்கு மும்பை இந்தியன்ஸ் உடன் சென்னை அணி மோதுகிறது.

செப்டம்பர் 22-ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது.

செப்டம்பர் 25ஆம் தேதி, டெல்லி கேப்பிடல் அணியுடன் மோதுகிறது.

அக்டோபர் மாதம் 2ம் தேதி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது.

அக்டோபர் 4ம் தேதி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி உடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது.

அக்டோபர் 7 ஆம் தேதி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது.

அக்டோபர் 10ஆம் தேதி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணைக்கும் அணியும் மோதவுள்ளன.

அக்டோபர் 13ஆம் தேதி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது.

அக்டோபர் 17ஆம் தேதி, டெல்லி கேப்பிடல் அணியுடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது.

அக்டோபர் 19ஆம் தேதி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது.

அக்டோபர் 23ம் தேதி, சென்னை மும்பை இந்தியன்ஸ் உடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது.

அக்டோபர் 25ஆம் தேதி, ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது.

அக்டோபர் 29ஆம் தேதி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது.

நவம்பர் மாதம் 1ம் தேதி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது.