சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்து வெளியாகவுள்ள படங்கள்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகர் சிவகா்த்திகேயன்.

இவர் தற்போது ரவிகுமார் இயக்கத்தில் அயலான், நெல்சன் இயக்கத்தில் டாக்டர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் கூட டாக்டர் படத்தில் இருந்து செல்லமா எனும் பாடல் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் 19,20,21 ஆகிய அடுத்தடுத்து வெளியாகவுள்ள படங்கள் மற்றும் அப்படங்களின் இயக்குனர்கள் யார் என்று பார்ப்போம்.

எஸ்.கே 19 அட்லீ துணை இயக்குநர் அசோக் குமார் என்பவரின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம்.

எஸ்.கே. 20 சசி என்பவரின் இயக்கத்தில் உருவாக இருக்கும் இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்க சிவா இப்படத்தில் நடிக்கிறார்.

எஸ்.கே. 21 கண்ணும் கண்ணும் கொள்ளையாடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் படம் தான் இது.

மேலும் இவை அனைத்தையும் குறித்து கூடிய விரைவில் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.