சினிமாவை விட்டு ஒதுக்கப்பட்ட பிரபல தயாரிப்பாளர்?

தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர் அஜித். அவர் நடிப்பில் வலிமை படம் மிகப்பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

இந்த படம் கொரொனா பிரச்சனையாக் கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, கூடிய விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இந்நிலையில் அஜித் 2005 முதல் 2010 வரை மிக மோசமான மார்க்கெட் உடன் தமிழ் சினிமாவில் வலம் வந்தார். இதையடுத்து ஒருசில படங்கள் வெற்றி கண்டாலும் இவர் நடிப்பில் ஜனா, ஆஞ்சனேயா, ஜி, ஆழ்வார் என பல படங்கள் படுதோல்வி அடைந்தது.

அந்த சமயத்தில் தயாரிப்பாளர் காஜா மொய்தீன் அஜித்தால் தான் நான் தற்கொலை முயற்சி செய்தேன் என கூறியுள்ளார். அதோடு 40 தூக்க மாத்திரைகளை அவர் போட்டதாகவும் கூறப்பட்டது.

நடிகர் அஜித்தின் ஜனா மற்றும் தேவதை கண்டேன் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர். இரு படங்களும் பெரும் தோல்வி கண்டதால் தான் இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

இதற்கு அஜித் தரப்பில், அந்த தயாரிப்பாளர்களுக்கு ஒரு விநியோகஸ்தரால் தான் இந்த நிலைமை, கடைசி வரை அவருடைய பெயரை மட்டும் ஏன் காஜ மொய்தீன் சொல்ல மறுக்கிறார், அவரால் தான் இந்த நிலை ஆனால் பலிகடா அஜித் என்று பதிலடி கொடுத்துள்ளனர். தற்போது அந்த விநியோகஸ்தர் யாராக இருக்கும்? என்று ரசிகர்கள் குழம்பி வருகிறார்கள்.