கொரோனாவால் பிரபல நடிகரின் குடும்பத்தில் நேர்ந்த மரணம்!

கொரோனாவால் இந்தியாவில் இதுவரை 29 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்தை கடந்துவிட்டது. இதனால் ஊரடங்கு இன்னும் நீடித்து வருகிறது.

ஹிந்தி சினிமாவில் அண்மையில் நடிகர்கள் இர்ஃபான் கான், ரிஷி கபூர் ஆகியோர் உடல் நலக்குறைவால் காலமாகினர். கொரோனாவால் திரையுலகமும் முடங்கிப்போயுள்ளது.

இந்நிலையில் பழம்பெரும் ஹிந்தி நடிகர் திலிப் குமாரின் இளைய சகோதரர் அஸ்லம் கான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை பலனளிக்காமல் அஸ்லம் கான் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் அவரின் குடும்பத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.