சென்னையில் திறக்கப்பட்ட மதுபான கடைகள்.. ஒரே நாளில் இவ்வளவு கோடி மட்டுமா?

கொரானா வைரஸால் உலகம் முழுவதும் பொருளாத ரீதியில் பெரும் சரிவையும் பஞ்சத்தையும் உருவாக்கி வருகிறது. அந்தவகையில் இந்தியாவில் 27 லட்சத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது பாதித்தவர்களின் எண்ணிக்கை.

தற்போது ஊரடங்கில் இருந்து தற்போது பல தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது மத்திய அரது. இதை தமிழக அரசும் பின்பற்றி செயல்படுத்து வருகிறது. தற்போது சென்னை தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் திறந்து விற்பனை நடைபெற்றுவரும் நிலையில் இருக்கிறது.

சென்னையில் நேற்றிலிருந்து 755 கடைகளில் 720 கடைகள் திறக்கப்பட்டன. மதுகடைகள் திறக்கப்பட்ட நிலையில் வசூல் அதிகரிக்கு ம் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அதற்கு காரணம் கடந்த 5 மாதங்களாக சென்னையில் மதுகடைகள் இல்லை.

இந்நிலையில் ஒரே நாளில் மதுக்கடைகள் திறந்து விற்பனைகள் ஆரம்பித்த நிலையில் கடைகளில் கூட்டம் குறைந்தே காணப்பட்டதாம். அதிலிருந்து 33 கோடி ரூபாய் மட்டுமே சென்னையில் 720 கடைகளில் இருந்து விற்பனையாகியுள்ளது.