பாடகர் எஸ்.பி.பி உடல்நலம் குறித்து அவருடைய மகன் வெளியிட்ட முக்கிய தகவல்…

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களில் ஒருவர் எஸ்.பி.பி. இவர் ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.

இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என இவர் பாடாத மொழிகளே இல்லை.

அந்த அளவிற்கு பேர் புகழை கொண்ட இவருக்கு கடந்த வாரம் கொரொனா தொற்று ஏற்பட்டது, இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி ஆகினர்.

ஆனால், அவரே லைவில் வந்து பேசியது பலருக்கும் கொஞ்சம் சந்தோஷத்தை கொடுத்தது.

தற்போது இவருடைய உடல்நிலை மிகவும் மோசமான நிலைய எட்டியதாக மருத்துவமனை சார்பில் கூறப்பட்டது.

அதை தொடர்ந்து ரசிகர்கள் மிகுந்த கவலையில் ஆழ்ந்தனர், பிறகு மருத்துவமனையில் இருந்து தம்ஸ் அப் சிம்பிள் காட்டினார் எஸ்.பி.பி.

தற்போது அவருடைய மகன் சரண் , அப்பா உடல்நலம் பயப்படும் அளவிற்கு ஏதுமில்லை, நலமாக உள்ளார் என்று கூறியுள்ளார், இந்த தகவல் பலருக்கும் சந்தோஷத்தை கொடுத்துள்ளது.