கடினமான சூழலை மீறி தமிழ்ப்பெண் செய்துள்ள சாதனை! என்ன தெரியுமா?

யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்த தமிழகத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணை இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது கைப் பாராட்டியுள்ளார்.

சமீபத்தில் யு.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில், தமிழகத்திலிருந்து சிலர் இந்த தேர்வில் தேர்ச்சியடைந்திருந்தாலும், குறிப்பிடத்தக்கதாக மதுரையை சேர்ந்த பூரண சுந்தரி எனும் பார்வையற்ற மாற்றுத் திறனாளி இந்த தேர்வில் தேர்ச்சியடைந்துள்ளார்.

இந்த தேர்வில் இவர் 286வது இடத்தினை அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முகமது கைஃப் சுந்தரியின் ஊக்கத்திற்கு பெற்றோர்கள் காரணம்.

வாசிப்பதற்கு ஏற்றவாறு புத்தகங்களை ஒலியாக மாற்றி கொடுத்துள்ளனர். இதுவே சுந்தரியின் வெற்றிக்கு அடிப்படை. உங்கள் கனவுகளைத் துரத்துவதை ஒருபோதும் நிறுத்த வேண்டாம் என டிவிட்டரில் சுந்தரியை பாராட்டியுள்ளார்.

இதே போல பல்வேறு நபர்கள் சுந்தரியை பாராட்டியுள்ளனர்.