சினிமா பிரபலத்திற்கு நேர்ந்த கொடுமை!

இணையதளத்தின் மீதான மோகம் பலருக்கும் அதிகமாகிவிட்டது. பலரின் வாழ்க்கையை உயரவைக்கும் இதுபோன்ற தளங்களில் சிலருக்கு ஆபத்துக்களும் நடைபெற்றுள்ளதை மறுக்கமுடியாது.

இந்நிலையில் ஹிந்தி மற்றும் பஞ்சாபி மொழிகளில் பல பாடல்களை பாடிவரும் பாத்ஷா என்ற பாடகர் கடந்த 2012 ல் சொந்தமாக band ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார்.

அவர் தன் நிகழ்ச்சிகளை விளம்பரம் செய்யும் பொருட்டு அதிக எண்ணிக்கையிலான லைக்ஸ் மற்றும் பார்வைகளுக்காக Paid Promotion முறையில் ரூ 75 லட்சம் செலுத்தியுள்ளாராம். ஆனால் இதில் மோசடி நடைபெற்றுள்ளதாக காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

இணையதள நிறுவனம் ஒன்று கொடுத்த விளம்பரத்தின் அடிப்படையில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளதாம். மேலும் பணபரிமாற்றம் செய்ததற்கான ரசீது, ஆவணங்களை கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறதாம்.