பிரபல நடிகரின் திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா!

கொரோனா தொற்று இந்தியாவில் இதுவரை 21 லட்சம் பேரை பாதிப்படைய செய்துள்ளது. 43 ஆயிரம் பேர் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளனர். சினிமா, சீரியல் தொழில் முற்றிலும் பாதிப்பட்டுள்ளன.

சினிமா பிரபலங்கள் சிலரின் திருமணம், திருமண நிச்சயதார்த்தம் போன்ற நிகழ்வுகள் இக்காலகட்டத்தில் நடைபெற்றுள்ளன.

குறைந்த அளவிலான கூட்டத்துடன், சமூக இடைவெளியை பின்பற்றி திருமண விஷேசங்களை நடத்திக்கொள்ளலாம் என அரசு அனுமதியுள்ளது.

கடந்த ஜூலை 26 ம் தேதி தெலுங்கு சினிமாவின் நடிகர் நிதின் மற்றும் ஷாலினியின் திருமணம் ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர நடைபெற்றது.

இதில் நெருங்கிய குடும்ப உறவினர்கள், நண்பர்கள், திரையுலக பிரபலங்கள் சிலர் நேரில் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற சிலருக்கு கொரோன தொற்று ஏற்பட்டிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மணமக்கள் மற்றும் பங்கேற்ற சிலரும் கொரோனா பரிசோதனை எடுத்து வருகிறார்களாம்.