கிடப்பில் போட்ட சூர்யா கவ்விக்கொண்ட அருண்விஜய் கடுப்பில் ஹரி

தனது ராசி இயக்குனரான ஹரியின் இயக்கத்தில் சூர்யா 6வது முறையாக நடிக்க இருந்த படம் தான் அருவா. இப்படத்தில் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி அருவா படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கி இந்த வருடம் தீபாவளிக்கு படத்தை வெளியிடுவதுதான் அருவா படக்குழு திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால், படத்தின் தலைப்பில் ஆரம்பமான பெரும் சர்ச்சை தொடர்ந்து படத்தைப் பற்றி நெகட்டிவான செய்திகள்தான் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக வந்து கொண்டு இருக்கிறது.

மேலும் இதையெல்லாம் விட படப்பிடிப்புகள் கொரோனா தொற்று காரணமாக ஆரம்பமாகவில்லை.

அதே நேரத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ என்ற படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார்.

இதனிடையே, ஹரி அவருடைய மைத்துனர் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்க உள்ள ஒரு படத்தை இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியானது.

இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை, ‘அருவா’ படம் இனி நடக்க வாய்ப்பில்லை என்ற தகவல் பெரிதளவில் இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருந்த வாடி வாசல், படத்திற்கு முன்னதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்க உள்ள படத்தில் சூர்யா நடிக்கப் போகிறார் என தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

சூர்யாவே ‘அருவா’ படத்தில் நடிக்க விருப்பம் காட்டவில்லை என்றும் ஒரு ‘அருவா’ முற்றிலும் டிராப்பா, அல்லது ‘வாடிவாசல்’ படத்திற்குப் பிறகு நடைபெறுமா என்பது தயாரிப்பு நிறுவனம் அறிவித்தால் தான் தெரிய முழுமையான விவரம் கிடைக்கும் வரும்.