பொலனறுவையில் முதலிடம் பிடித்துள்ள மைத்திரி

பொலனறுவை மாவட்ட விருப்பு வாக்குகள் வெளியிடப்பட்டமையை அடுத்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 111137 விருப்பு வாக்குகளை பெற்று மாவட்ட விருப்பு வாக்கு பட்டியலில் முன்னிலை வகிக்கிறார்.

ஜனாதிபதி பதவி வகித்த ஒருவர் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு மாவட்ட அடிப்படையில் விருப்பு வாக்கில் அதி கூடிய வாக்குகளை பெற்றவர் என்ற நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளார்.

7ம் இலக்கத்தில் மொட்டு சின்னத்தில் போட்டியிட்டு பொலனறுவை மாவட்ட பிரதிநிதியாக பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள அவர், தேர்தல் பிரசார நடவடிக்கையின் போது, தனது இலக்கத்தை மையப்படுத்தி, வாக்காளர்களிடம் காலை 7.00 மணிக்கே சென்று வாக்களிக்குமாறு மக்களை ஈர்க்கும் வகையில் பிரசாரமும் செய்திருந்தார்.