நடைபெற்ற 9ஆவது நாடாளுமன்ற தேர்தலில் கட்சிகள் பெற்றுக்கொண்ட மேலதிக ஆசனங்களின் எண்ணிக்கை அறிவிப்பு

இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்துள்ள நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஒவ்வொரு கட்சிகளும் பெற்றுக்கொண்ட தேசிய பட்டியல் ஆசனங்களின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு 17 மேலதிக ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி 7 ஆசனங்களும், தேசிய மக்கள் சக்திக்கு ஒரு ஆசனமும் கிடைக்கப்பெற்றுள்ளது.

மேலும் இலங்கை தமிழரசு கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் அபே ஜன பல கட்சி போன்றவற்றிகு தலா ஒரு ஆசனம் வீதம் கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அமோக வெற்றியை பதிவு செய்துள்ளமை, தற்போது வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் உறுதியாகி உள்ளது.