சிறந்த வீரர் ஒருவரை அணியில் சேர்க்க மறுத்த டோனி..!!

இன்னும் சில நாட்களில் நடப்பு சீசனுக்கான ஐ.பி.எல் தொடர் ஐக்கிய அமீரகத்தில் ஆரம்பமாகவுள்ள சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரும், முன்னாள் பி.சி.சி.ஐ தலைவருமான என்.சீனிவாசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் தேர்வில் டோனியின் அக்கறை குறித்து தெரிவித்துள்ளார்.

நாங்கள் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் திறமையான வீரர் ஒருவரை சென்னை அணிக்காக ஏலத்தில் எடுக்க முனைந்தோம்.

அது குறித்து அணித் தலைவர் டோனியிடம் தெரிவித்தோம். ஆனால், அந்த வீரர் அணிக்குள் வந்தால் அணியின் ஒற்றுமையை கெடுத்து விடுவார் என டோனி பதிலளித்தார்.

அதோடு அந்த வீரரை ஏலத்தில் எடுக்கவும் வேண்டாம் என மறுத்துவிட்டார் என வெபினார் மூலம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் என்.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அந்த வீரர் யார் இந்த சம்பவம் எப்போது நடந்தது போன்ற தகவல்களை அவர் தெரிவிக்கவில்லை.