முப்பருப்பு வடை செய்வது எப்படி?..!!

தேவையான  பொருட்கள்:

உளுத்தம்பருப்பு – ஒரு கப்

மிளகு, சீரகம் – சிறிதளவு

கடலைப்பருப்பு – ஒரு கப்

துவரம்பருப்பு –  ஒரு கப்

கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு

வெங்காயம் – 1

பெருஞ்சீரகம் – அரை டீஸ்பூன்

இஞ்சி – சிறிய துண்டு

நெய் – 2 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் – 10

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை :

வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பருப்பு வகைகளை கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைத்து வடித்து, பெருஞ்சீரகம், மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக இருக்குமாறு அரைத்து எடுத்து கொள்ளவும்.

பின் அரைத்த மாவில் நறுக்கி வைத்துள்ள காய்கறி மற்றும் நெய் விட்டு நன்கு பிசைந்து எடுத்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்த மாவை எடுத்து போட்டு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, வடைகளாக தட்டிப் போட்டு, பொரித்து எடுத்தால், சூப்பரான முப்பருப்பு வடை ரெடி.!