பாலில் ரசாயன பொருட்கள் கலந்திருந்ததை எப்படி கண்டுபிடிக்கலாம்ன்னு தெரியுமா?

பாலில் புரோட்டீன், கால்சியம், விட்டமின், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது.

ஆனால் காலை உணவாக பாலை மட்டும் குடிப்பதை தவிர்த்து, சரிவிகித உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.

ஏனெனில் பால் குடித்தால் மட்டும் நமக்கு அனைத்து சத்துக்களும் கிடைத்து விடாது. எனவே பாலை அதிகமாக எடுத்துக் கொள்வதை தவிர்த்தால், பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

காலை உணவில் கார்போஹைட்ரேட், புரோட்டீன்ஸ் போன்ற சத்துக்கள் அவசியம் இருக்க வேண்டும். ஏனெனில் நீண்ட நேரம் இடைவேளி இருப்பதால், மூளைக்கு குளோக்கோஸ் தேவைப்படும்.

பாலில் கலப்படத்தை எப்படி கண்டுபிடிக்கலாம் என்று பார்ப்போம்

  • சுத்தமான பாலை இரண்டு ஸ்பூன் எடுத்து அதில் எலுமிச்சை சாறு கலந்தால், அந்த பால் உடனே திரிந்து விடும். ஆனால், கலப்பட பாலிலில் தெரியாது.
  • பாலில் சோப்புத் தூள் கலந்திருந்தால், அதை கண்டறிய ஒரு சிறிய கண்ணாடி குடுவையில் பாலை ஊற்றி நன்கு குலுக்கினால் நுரை வருமாம்.
  • பாலில் மாவு பொருட்கள் கலந்திருந்தால், இதனைக் கண்டறிய சிறிது பாலில் ஒரு சில சொட்டு டிஞ்சர் சேர்த்தால் உடனடியாக பால் நீல நிறத்தில் மாறுமாம், அப்படியானால் அது மாவு பொருள் கலப்படம் செய்யப்பட்ட பால் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
  • பாலில் ரசாயனப் பொருட்கள் கலந்திருந்தால் அதனை பிஎச் காகிதம் கொண்டு கண்டு பிடித்து விடலாமாம், ஒரு சிறிய டம்ளரில் பாலை எடுத்து அதில் பிஎச் காகிதத்தைப் போட்டால் காகிதம் பச்சை நிறமாக மாறினால் அதுதான் நல்ல பாலாம்.
  • வழுவழுப்பான தரையில் சுத்தமான பாலை ஒரு சில துளிகள் விட்டால் அது அப்படியே தரையில் இருக்குமாம், ஆனால் மாவு கலந்த பாலை விட்டால் அது மாவின் கனத்தினால் தரையில் ஓடுமாம்.
  • வெறும் பாலாக இருந்தால் சிறிது நேரத்தில் அந்த நுரை தானாகவே போய் விடும். ஆனால், சோப்புத் தூள் கலந்த பாலாக இருப்பின் அந்த நுரை போகாதாம்.
  • அதுவே, மஞ்சள் அல்லது ஆரஞ்சு, வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் அது ரசாயனம் கலந்த பால் என்பதை உறுதி செய்ய வேண்டும்.