கொரோனா இருப்பது தெரிந்தும் இளம்பெண் செய்த தவறான செயல்…!!!

தனக்கு கொரோனா இருப்பது தெரிந்தும் இளம்பெண் ஒருவர் பார்ட்டி ஒன்றை நடத்தியுள்ளார்.

அந்த 21 வயது பெண் சுவிட்சர்லாந்தின் Solothurn மாகாணத்திலுள்ள Grenchenபகுதியில் நடத்தியுள்ள பார்ட்டியில் சுமார் 280 பேர் வரை கலந்துகொண்டுள்ளனர்.

ஆகவே, உண்மை தெரியவந்ததையடுத்து அந்த 280 பேரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக அரசு சட்டத்தரணி வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள நிலையில், அந்த பெண்ணுக்கு சுவிஸ் சட்டப்படி 10,000 சுவிஸ் ஃப்ராங்குகள் வரைஅபராதம் விதிக்கப்படலாம் என தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், அந்த பார்ட்டியில் கலந்துகொண்ட ஒரு ஜோடி திருமணம் செய்வதாக இருந்துள்ள நிலையில், இந்த தனிமைப்படுத்தல் காரணமாக திருமணத்தை ரத்து செய்ய வேண்டியதாகிவிட்டது.

ஆகவே, இந்த பிரச்சினைக்கு காரணமான நபர் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பிற்காக நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரி அவர்கள் வழக்கு தொடர இருப்பதாக தெரியவந்துள்ளது.

அத்துடன், அவர்கள் வழக்கு நிச்சயம் வெற்றிபெறும் என்றும் சட்டவியல் வல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.