அமெரிக்கா, பிரேசில், இந்தியாவில் மீண்டும் உச்சகட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் கொரோனா..

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் பலி எண்ணிக்கையானது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனவிற்கான மருந்துகளை கண்டறியும் பணியை செய்து வருகிறது.

உலகளவில் அதிகளவு பாதிக்கப்பட்ட நாடாக ஐரோப்பிய நாடுகள் துவக்கத்தில் கடுமையான பேரழிவை சந்தித்த நிலையில், தற்போது அமெரிக்கா கடுமையான அளவு பாதிக்கப்பட்டுள்ளது. உலகளவில் மூன்றாவது கொரோனா பாதிப்பு நாடாக இந்தியாவும் இருக்கிறது.

உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13,457,458 ஆக உயர்ந்துள்ளது. 581,221 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 7,847,226 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் 3,545,077 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரேநாளில் 935 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 1,39,143 ஆக உயர்ந்துள்ளது. பிரேசிலில் 1,931,204 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரேநாளில் 1,341 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 74,262 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் 937,487 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரேநாளில் 588 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 24,315 ஆக உயர்ந்துள்ளது. ரஷியாவில் 739,947 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரேநாளில் 175 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 11,614 ஆக உயர்ந்துள்ளது.