நடிகர் விஜய் சேதுபதியை கிண்டல் அடித்த பார்த்திபன் !

தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் தற்து துக்ளக் தர்பார் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு கோவிந்த வந்தா இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை அதிதி ராவ் நடித்துள்ளார். இதில் இன்னொரு சிறப்பம்சம் என்றவென்றால் பார்த்திபன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் பர்ஸ்லுக் போஸ்டரை நேற்று படக்குழு வெளியிட்டது. இதில், நடிகர் விஜய் சேதுபதியும், நடிகர் பார்த்திபன் நிற்பது போன்ற புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் நடிகர் பார்த்திபன் இந்தப் படம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், பார்த்திபன்:நானும் ரவுடிதான்,நீயும் ரவுடிதான்.இன்னைக்கு உன் துக்luck தர்பார் எவ்வளவு பெரிய Level-ல இருக்குன்னு எனக்கு தெரியாதுன்னு நினைச்சுகிட்டு”இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா”ங்கிற Range-க்கு பவ்யமா கையை கட்டிகிட்டு நின்னா என்ன அர்த்தம்? உன் MASTER plan தான் என்ன? என்று கிண்டல் அடிப்பது போல் அவரது மூன்று படங்களை குறிப்பிட்டு பார்த்திபன் பதிவிட்டுள்ளார்.