மருத்துவ குணங்கள் கொண்ட சூரியகாந்தி..!!

சூரியகாந்தி விதையின் எண்ணெய், சத்து நிறைந்துள்ளது. இதில் உள்ள எண்ணெய் நல்ல கொழுப்பு வகையை சார்ந்தது. இந்த கொழுப்பு இதயத்திற்கு மிகவும் நல்லது தொடர்ச்சியாக பயன்படுத்தும் நல்லெண்ணெயுடன் சூரியகாந்தி எண்ணெய்யும் அடிக்கடி பயன்படுத்தலாம்.

இதயத்தில் நல்ல கொழுப்பை சேர்த்து கெட்ட கொழுப்பை கரைக்கும். இதனால் இதய சுவர்கள் பலமடையும் கல்லீரலில் நல்ல கொழுப்பை சேர்ப்பதால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து தொப்பை கட்டுப்படும்.

இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் ரத்த அழுத்தம் போன்ற நோய்களையும் சூரிய காந்தி விதைகள் கட்டுப்படுத்துகின்றன. நீரிழிவு மற்றும் புற்றுநோய்களை கட்டுப்படுத்துகிறது, ஆஸ்துமா தொடர்பான நோய்களையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது.

இதன் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயை உபயோகிப்பதன் மூலம் பக்கவாத நோய் தாக்குதலும், சிறுநீரகத்தில் கல் உருவாவதும், தடுக்கப்படுகிறது. இதில் உள்ள வைட்டமின் ஈ உயிர்சத்து, மற்றும் ஆன்டிஆக்சிடன்ட், உடல் மற்றும் தசை வளர்ச்சிக்கு உதவுகின்றன.

காற்றுக் குழாய், மூச்சுக் குழாய் மற்றும் நுரையீரல் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதன் எண்ணெய் அதிக கொழுப்பு சத்தை குறைக்கும். சூரியகாந்தி விதையில் காணப்படும் மெக்னீசியம் நரம்பு செல்களை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

சூரியகாந்தி பூவின் எடைக்கு நான்கு மடங்கு அதிகமாக நல்லெண்ணெய் சேர்த்து பதமாய்க் காய்ச்சி வடிகட்டி உடலுக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் தலையில் நீர் கோர்த்தல் ஜலதோஷம் தலை வலி ஆகிய பிரச்சினைகள் நீங்கும் உடல் பிடிப்பு வலி குடைச்சல் ஆகியவற்றுக்கும் பயன்படுத்தலாம். சூரியகாந்தி விதையை அப்படியே மென்று சாப்பிடலாம் இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் உடலில் உள்ள கழிவுகள் நீங்கும்.