இந்த சின்ன காரணத்தினால் தல அஜித் தேசிய விருதை பெறமுடியாமல் போய்விட்டதா, என்ன காரணம் தெரியுமா?

தல அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர். இவரின் நடிப்பில் சென்ற வருடம் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை போன்ற திரைப்படங்கள் பெரிய வெற்றி அடைந்தது.

அதனை தொடர்ந்து இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தல அஜித் இப்போது மாஸ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனால் கடந்த 2000 ஆம் ஆண்டு முகவரி என்ற கிளாஸ் ஆன திரைப்படத்தில் நடித்துள்ளார்.

தல அஜித்திற்கு மிகவும் பிடித்த திரைப்படமும் முகவரி தான், இப்படத்திற்காக இயக்குனர் V.Z.துரைக்கு நடிகர் அஜித் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளாராம்.

மேலும் இப்படத்திற்காக தல அஜித் தேசிய விருதில் பரிந்துரைக்கப்பட்டு, பின்னர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் பெறமுடியாமல் போய்விட்டதாம்.