விஜய்யுடன் இணைந்து யுவன் ஷங்கர் ராஜா.

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக பணிபுரிந்து வருபவர் யுவன் ஷங்கர் ராஜா.

ஆம் 100 படங்களுக்கும் மேலாக இசையமைத்துள்ள யுவன், ரசிகர்கள் மத்தியில் ஒரு ஹீரோவை போல் கொண்டாடப்பட்டு வருகிறார்.

இவர் இசையில் கடைசியாக வெளிவந்த ஹீரோ மற்றும் நேர்கொண்ட பார்வை படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இவர் வலிமை, டிகிலோனா உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்த யுவன் ” விஜய்யுடன் மீண்டும் எப்போது இணைந்து பணிபுரிய போகிறீர்கள் ” என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு சுவாரஸ்யமான பதிலை அளித்தார்.

அவர் கூறியது ” நான் எப்போதும் ரெடி தான் வாய்ப்பு வந்தால் செய்து விடலாம் என்று கூறினர். விஜய் தனக்கு பல நேரங்களில் நல்லவிதமாக ஊக்கமளித்துள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார் “.

மேலும் விஜய்யும் யுவனும் புதிய கீதை படத்தில் மட்டுமே வேலைபார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.