பிரபல நடிகை டாப்ஸியின் பட வாய்ப்புகளை தட்டி பறித்த வாரிசு நடிகர்கள்.!!

தமிழில் தனுஷ் நடித்து வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானவர் இளம் நடிகை டாப்ஸி.

இவர் இதன்பின் வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

மேலும் இவர் தமிழில் அவ்வபோது நடித்து வந்தாலும் ஹிந்தியில் முன்னணி நடிகை என பேர் எடுத்துவிட்டார்.

இந்நிலையில் பாலிவுட் திரையுலகில் தனக்கு நேர்ந்த சில கொடுமைகளை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை டாப்ஸி.

இவர் கூறியது ” திரையுலகில் பிரபலமாக இருப்பவர்களின் குடும்பத்தில் இருந்து வருபவர்களுக்கு சினிமாவை சேர்ந்த தொடர்புகள் அதிகம் கிடைக்கிறது. இதனால் சினிமா வாய்ப்புகளை எளிதாக பெற்று விடுகின்றனர். ஆனால் வெளியில் இருந்து வரும் என்னைப்போன்ற நடிகர் நடிகைகள், பிரபலங்களுடன் அறிமுகமாகவும் தொடர்புகளை பெற்றுக்கொள்ளவும் அதிக நாட்கள் தேவைப்படுகிறது. பல இயக்குனர்கள் வெளியில் இருந்து வருபவர்களை நடிக்க வைப்பதற்கு பதிலாக தனக்கு தெரிந்த வாரிசு நடிகர்களை நடிக்க வைக்கின்றனர்.

மேலும் அவர் கூறியது ” சினிமாவில் வாரிசுகள் ஆதிக்கத்தினால் சில பட வாய்ப்புகளை நான் இழந்து வேதனைப்பட்டேன். இதுபோன்ற குளறுபடிகள் ஏற்படுவதற்கு ரசிகர்களும் காரணம். சினிமா குடும்பத்தில் இருந்து அறிமுகமாகிறவர்களின் படங்களை பார்க்கவே அவர்கள் ஆர்வமாக செல்கிறார்கள். வெளியில் இருந்து வரும் என்னைப்போன்ற நடிகர் நடிகைகளின் படங்களை பார்க்க மறுக்கின்றனர் ” என கூறினார்.