ஆட்டு இறைச்சியால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..!!

அசைவ உணவுகளில் மனிதனுக்கு அதிகப்படியான நன்மை தரக்கூடிய உணவு ஆட்டு இறைச்சி. ஆட்டின் தலை, இதயம், மூளை, நுரையீரல் என்று ஒவ்வொன்றும், மருத்துவப் பயன்களை அதிகமாக தரக்கூடியது.

நாம் ஆட்டிறைச்சி சாப்பிடும் பொழுது, அதன் சதைகளை மட்டும் சாப்பிடக்கூடாது. அனைத்து உறுப்புகளையும் சாப்பிடுவது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

ஆட்டிறைச்சி சாப்பிடுவதன் மூலம் நன்மைகள்: 

நமது இதயத்திற்கு ஆடு மிகவும் நல்லது. மேலும், ஆட்டிறைச்சி சாப்பிடுவதன் காரணமாக நமது குடலில் இருக்கும் கழிவுகளை நீக்கி, மேலும் நமது தலைப்பகுதில் இருக்கும் எலும்புகளை வலுவாக்கும்.

ஆட்டுக்கால் சூப்பை வைத்து சாப்பிடுவதனால் நமது எலும்புகள் வலுவாகும். இது பார்வை கோளாறுகளை சரிசெய்த்து கூர்மையான பார்வையை நமக்கு பெற்றுத்தரும்.

உடலில், தாது விருத்தியை ஏற்படுத்தும். மேலும், கண்ணுக்கு குளிர்ச்சி, அதிக நினைவாற்றல் மற்றும் வலிமையான மூளை ஆகியவற்றை ஏற்படுத்தும். ஆட்டின் மூளைப் பகுதியை உணவில் சேர்த்துக் கொண்டால் கபத்தை நீக்கி, மார்பு பகுதியில் இருக்கும் புண்களை குணப்படுத்தும்.

மேலும், மார்பக பகுதியை வலிமை அடையச் செய்கின்றது. ஆட்டின் இதயத்தை சாப்பிடுவதன் மூலம், நம்முடைய இதம் நன்கு வலுப்பெறுகின்றது.  மேலும் ஆட்டின் நுரை ஈரல் மற்றும் கொழுப்பு வெப்பத்தை குறைக்க உதவுகிறது.

ஆட்டு இறைச்சி சாப்பிடுவன் காரணமாக, நமது சிறுநீரக சுரப்பி வலிமை அடையும். இதனால் ஆண்குறி வலிமை அடைய உதவுகிறது. நமது உடல் வெப்பத்தை தணித்து, தோலை வலிமை மற்றும் பொலிவடைய செய்யும்.