கோவைக்காய் ரைஸ் செய்வது எப்படி??

தேவையான பொருட்கள்:

வடித்த சாதம்  – 200 கிராம்
மஞ்சள் தூள்   – 1\4 டீஸ்பூன்
கோவைக்காய் – 150 கிராம்
பொடியாக நறுக்கிய பெரிய
வெங்காயம்  –  1
நறுக்கிய கறிவேப்பிலை  – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
சீரகம் – 1/2 டீஸ்பூன்
மல்லித்தூள் – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் – தேவையான அளவு
தண்ணீர்   – தேவையான அளவு.

செய்முறை:

கடாயில் எண்ணெய் சேர்த்து சூடான பின்னர் சீரகம், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகுத்தூளைச் சேர்த்து வதக்கவும்.

நறுக்கிய கோவக்காயைச் சேர்த்து வதக்கவும். பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து வேக வைத்து சாதத்துடன் மிக்ஸ் செய்யும் பதத்திற்கு கோவக்காய் கலவை இருக்க வேண்டும்.

வறவறவென இருக்கக்கூடாது. கோவைக்காய் வெந்தவுடன் வடித்தச் சாதத்தைச் சேர்த்து பிரட்டி மிக்ஸ் செய்யவும். சுவையான கோவைக்காய் ரைஸ் ரெடி.!