சூடான வரகு அரிசி போண்டா செய்வது எப்படி??

தேவையான பொருட்கள் :

கடலை மாவு – கால் கிலோ
வரகு அரிசி மாவு – கால் கிலோ
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 5
கறிவேப்பிலை – 1 கொத்து
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி
எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை :

பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வரகு அரிசி மாவு, கடலை மாவு ஆகியவற்றை தண்ணீர்விட்டு கரைத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு பொடியாக நறுக்கிய காய்கறிகளை அதில் கொட்டி பிசைந்து எடுத்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெயை ஊற்றி, காய்ந்த பின்னர் மாவை உருண்டையாகப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

சுவையான, சூடான வரகு அரிசி போண்டா ரெடி.!