பிரபல ஹாலிவுட் நடிகரை பின்பற்றி தளபதி விஜய் செய்யும் விஷயம், வெளியான சுவாரஸ்யமான தகவல்..

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பல சாதனைகளை புரிந்து வருகிறது.

இவர் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படமும் லாக்டவுன் முடிந்தவுடன் வெளியாகும் என கூறப்படுகிறது.

இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளதால் ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் தற்போது விஜய் சென்னை நீலாங்கரையில் பீச் ஹவுஸை மீண்டும் கட்டி வருவதாகவும், அந்த வீடு பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் வைத்துள்ள பீச் ஹவுஸ் போலவே கட்டப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் தளபதி விஜய் இதற்கு முன்பு பலமுறை அமெரிக்காவுக்கு ஷூட்டிங்கிற்காகவும், குடும்பத்தினருடன் சுற்றுலாவும் பலமுறை சென்று வந்திருக்கிறார். அப்படி ஒருமுறை சென்ற போது விஜய் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ்-ன் பீச் ஹவுஸை பார்த்து வியந்து உள்ளார்.

அதனை அப்போது போட்டோ எடுத்து வந்து அதுபோலவே தற்போது தான் கட்டி வரும் வீட்டை வடிவமைக்க கூறியுள்ளார் விஜய் என்றும் சொல்லப்படுகிறது.