11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன்கள்..!!

தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் உள்ள சுந்தராபுரம் பகுதியை சார்ந்த 11 வயது சிறுமியின் தந்தை கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுமியின் தாயார் இறந்துவிட்ட நிலையில், தந்தையின் பராமரிப்பில் சிறுமி வளர்ந்து வருகிறார்.

இவர்கள் வசித்து வந்த இல்லத்தில், வீட்டின் கீழ் தலத்தில் வீட்டின் உரிமையாளர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்த இல்லத்தில் 17 வயது சிறுவன் வசித்து வந்த நிலையில், சிறுவனின் தந்தை கடை நடத்தி வருவதால் தினமும் கடைக்கு சென்றுவிடுவார்.

பெரும்பாலான நேரங்களில் சிறுவன் மற்றும் சிறுமி இல்லத்தில் தனியாக இருந்து வரும் நிலையில், சிறுவனின் இணையதள வகுப்பிற்காக அவனது தந்தை அலைபேசி வாங்கி தந்துள்ளார். மேலும், சிறுமியின் இல்லத்தில் தொலைக்காட்சி இல்லாத நிலையில், சிறுமி வீட்டின் உரிமையாளர் வீட்டிற்கு சென்று தொலைக்காட்சி பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 14 ஆம் தேதி சிறுமி, சிறுவனின் இல்லத்திற்கு சென்ற நிலையில், சிறுவனின் இல்லத்தில் அவனுடைய நண்பர்கள் இருவர் இருந்துள்ளனர். இவர்கள் மூவரும் சேர்ந்து ஆபாச படம் பார்த்த நிலையில், சிறுமியையும் கட்டாயப்படுத்தி ஆபாச படம் பார்க்க வைத்துள்ளனர்.

பின்னர் மூவரும் சேர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ள நிலையில், இதனை வெளியே கூறினால் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். இப்படியே சிறுமியை ஒரு வாரத்திற்கு மூவரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், சிறுமிக்கு வயிறு வலிக்க துவங்கியுள்ளது.

ஒரு சமயத்திற்கு மேலாக வயிற்று வலி பொறுக்க இயலாத சிறுமி தந்தையிடம் வயிறு வலிப்பதாக கூறி கதறி அழவே, சிறுமியின் தந்தை அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். மருத்துவமனையில் சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகியது உறுதியான நிலையில், காவல் துறையினரின் விசாரணையில் பெரும் அதிர்ச்சி தகவலாக மேற்கூறியது தெரியவந்துள்ளது.