இதுவரை எந்த ஹீரோவும் செய்யாத சாதனை!

சினிமா ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் என்றால் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டம் தான். இப்படியிருக்க அவர்களின் பிறந்த நாள் என்றால் ரசிகர்கள் சும்மா விட்டு விடுவார்களா என்ன.

தெலுங்கு சினிமாவில் பெரும் ரசிகர்கள் வட்டாரத்தை கொண்ட நடிகர்களில் ஒருவர் பால கிருஷ்ணா. மூத்த நடிகரான அவரின் படத்திற்கு இன்னும் வரவேற்புண்டு.

அண்மையில் அவரின் 60ம் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதுவும் எப்படி தெரியுமா? NBK 60 என 21 ஆயிரம் கேக்குகளை ஒரே நேரத்தில் ஜூன் 10 ம் தேதி காலை 10.10 மணிக்கு வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் 80 ஆயிரம் பேர் கலந்து கொண்டார்களாம். இது கின்னஸ் ரெக்கார்டிலும் இடம் பெற்றுள்ளதாம்.