மதுரையில் முழு ஊரடங்கு?.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்துள்ளது. இதனால் தமிழக அரசு பல கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் கடுமையான அளவு கொரோனா அதிகரித்ததால் ஜூன் 30 வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழகம் முழுவதும் கரோனா வைரஸின் வீரியமானது கடுமையான அளவு அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பல மாவட்டங்கள் மீண்டும் கொரோனா பாதிப்பை கடுமையாக எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு மீண்டும் தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பானது அதிகரித்து வருகிறது. அம்மாவட்டத்தில் 636 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 367 பேர் பூரண நலனுடன் இல்லத்திற்கு திரும்பியுள்ளனர். 8 பேர் பலியாகியுள்ளனர். 261 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் செய்தியாளர்கள் மதுரையில் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புகள் உள்ளதா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் மதுரையில் முழு ஊரடங்கு தொடர்பாக தமிழக முதல்வர் அறிவிப்பார் என்று தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் மீண்டும் மாவட்ட வாரியாக கொரோனா வைரஸின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருவதால், மீண்டும் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.