அடிலெய்டு பகல்-இரவு டெஸ்ட் நிச்சயமாக சவாலாக இருக்கும் – இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மோன் கருத்து

டிசம்பர் 11-ந்தேதி 2-வது டெஸ்ட்அடிலெய்டில் பகல்-இரவு டெஸ்டாக நடக்கவுள்ளதால் இந்த டெஸ்ட் மிகவும் சவாலானதாக இருக்கும் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

இதன் முதல் டெஸ்ட் டிசம்பர் 3-ந்தேதி கப்பாவில் நடக்கிறது.

இதுகுறித்து இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மோன் ரோகித் சர்மா “நான் இதுவரை பிங்க் பால் டெஸ்டில் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கி விளையாடவில்லை. அடிலெய்டு டெஸ்ட் சவாலானதாக இருக்கும்’’ என்று கூறியுள்ளார்.

மேலும் இந்திய அணி கொல்கத்தாவில் வங்காளதேசத்திற்கு எதிராக ஒரேயொரு பிங்க் பால் டெஸ்டில் மட்டும் விளையாடியுள்ளது எனவும் அதன்பின் நேராக ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.