கொரோனா வைரஸை கட்டுப்படுத்த புதிய மாத்திரை… இங்கிலாந்து மருத்துவர்களின் புதிய முயற்சி! முக்கிய தகவல்

இந்தியாவில் மலேரியாவுக்கு வழங்கப்படும் மாத்திரையான ஹைட்ராக்சிகுளோரோகுயின் கொரோனா வைரஸ்களின் அளவை கட்டுப்படுத்தும் என கண்டறியப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இது தடுப்பு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இதையடுத்து, இங்கிலாந்தில் பெரும்பாலும் வலி நிவாரணியாகவும், அழற்சி எதிர்ப்பு மருந்தாகவும் பயன்படுத்தப்படும் ‘இபுபுரூபன்’ என்ற மாத்திரை கொரோனா வைரஸ் சிகிச்சையில் சிறப்பான பங்காற்றும் என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

காரணம், இது சுவாச பிரச்சினைகளுக்கு சிகிச்சையாக பயன்படும் என்ற நம்பிக்கை விஞ்ஞானிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது.

மிக குறைந்த விலையில் கிடைக்கிற இந்த மாத்திரைகளை சுவாச பிரச்சினையால் அல்லலுறுகிற கொரோனா நோயாளிகளுக்கு தருகிறபோது, வென்டிலேட்டர் என்னும் செயற்கை சுவாச கருவிகள் பொருத்த வேண்டிய நிலை ஏற்படாது என கருதுகிறார்கள்.