திரையுலக நட்சத்திரங்களை ஒன்றிணைத்து வெளியாகியுள்ள காணொலி!

ஓடிடி பிளாட்பாரத்தில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிவரும் மணி ஹெய்ஸ்ட்’ சீரியலில் நடித்து வரும் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் தமிழ் நடிகர் நடிகைகளுடன் ஒப்பிட்டு அவ்வவ்போது செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் தற்போது இது குறித்த காணொலியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இந்த காணொலியில், மணி ஹெய்ஸ்ட் தொடரின் டோக்கியா கேரக்டரில் தமன்னாவும், பெர்லின் கேரக்டரில் தல அஜித்தும், மாஸ்கோ கேரக்டரில் சீயான் விக்ரமும், டென்வர் கேரக்டரில் சிம்புவும், ரியா கேரக்டரில் ஆர்யாவும், ஹெல்சிங்கி கேரக்டரில் அரவிந்தசாமியும், நைரோபி கேரக்டரில் சமந்தாவும், ராக்வல் கேரக்டரில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும், புரபொசர் கேரக்டரில் தளபதி விஜய்யும் நடிக்கலாம் என்று அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.