12 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை.. சேலத்தில் காமுகனால் அரங்கேறிய சோகம்.!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் கருமலைகூடல் துறையூர் பகுதியை சார்ந்தவர் மூர்த்தி (வயது 37). இவரது மனைவியின் பெயர் பழனியம்மாள். இவர்கள் இருவருக்கும் மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், இவர் அப்பகுதியில் செங்கல்சூளை நடத்தி வருகிறார்.

இதே சூளையில் அப்பகுதியை சார்ந்த 12 வயது சிறுமி மற்றும் அவரது தாய் பணியாற்றி வரும் நிலையில், சிறுமி திடீரென கர்ப்பமாகியுள்ளார். இந்த விஷயம் குறித்து சிறுமியிடம் தாய் விசாரணை செய்கையில், சிறுமியை மூர்த்தி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

மேலும், இது குறித்து யாரிடமும் கூறினால் குடும்பத்துடன் கொலை செய்து விடுவதாக சிறுமியிடம் மூர்த்தி மிரட்டியுள்ளான். இதனால் பயந்துபோன சிறுமி இது குறித்து வெளியே கூறாமல் இருந்து வந்த நிலையில், சிறுமி கர்ப்பமாகியுள்ளார்.

தன் உடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் கூற அறியாத பச்சிளம் சிறுமிக்கு அங்குள்ள மேட்டூர் ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. இந்த விஷயம் குறித்து சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, மூர்த்தி போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளான். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.