சொந்த அண்ணனால் நரகத்தை சந்தித்த பெண்.!!

இந்தியாவின் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் பச்சாபபூர் கிராமத்தில் சிறுமி வசித்து வருகிறார். இவர் தனது சொந்த அண்ணனால் கடந்த 6 மாதமாக பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த விஷயம் சிறுமியின் தந்தைக்கு தெரியவந்ததை அடுத்து, தனது மகன்களை கண்டித்த நிலையில், இது குறித்து வெளியே கூறினால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன சிறுமி செய்வதறியாது இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை சிறுமி தற்கொலை செய்துகொள்ளவே, இந்த விஷயம் குறித்து சிறுமியின் இளைய சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு சிறுமியின் சகோதரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், இது குறித்து காவல் துறையினர் தெரிவிக்கையில், சிறுமி கடந்த ஆறு மாதமாக சகோதரரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்றும், சிறுமியின் தந்தை இது குறித்து அறிந்து மகன்களை கண்டித்தும், இருவரையும் சிறுவன் மிரட்டியுள்ளான் என்பதும் தெரியவந்துள்ளது.