இரட்டை குழந்தைகளுக்கு வெவ்வேறு தந்தை.!

சீன நாட்டில் பிறந்த குழந்தைகள் தொடர்பாக நிலையான நடைமுறை பின்பற்றப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக குழந்தைகளை டி.என்.ஏ சோதனைக்கு உட்படுத்தும் முறையும் இருக்கிறது. இந்த முறையில், ஒரு தம்பதியின் இரட்டை குழந்தைகளை சோதனை செய்த சமயத்தில், இரண்டு குழந்தைகளின் டி.என்.ஏ வெவ்வேறாக இருந்துள்ளது.

இந்த இரட்டை குழந்தைகளில் ஒருவருக்கு டி.என்.ஏ மாறியிருந்த நிலையில், இதனை அறிந்த குழந்தையின் தந்தை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளர். மேலும், குறித்த நபரின் மனைவி மற்றொரு நபருடன் தாம்பத்தியம் மேற்கொண்டுள்ளதும் உறுதியாகியுள்ளது.

இதுபோன்ற விஷயம் சுமார் கோடியில் ஒருவருக்கு நடக்கும் என்றும், இரண்டு குழந்தைகளை பெற தாய் முதலில் இரண்டு கருமுட்டையை உற்பத்தி செய்ய வேண்டும் என்றும், பின்னர் இரண்டு ஆணுடன் தாம்பத்தியம் மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட ஆய்வாளர் டெங் யூஜின் கூறியுள்ளார்.

மேலும், இது இயற்கையாக நடக்கும் நிலையில், பெண் கருவுறுதலுக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட இரண்டு நபர்களுடனான தாம்பத்தியத்தால் இது நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இரண்டு குழந்தைகளும் தாயின் கருவறையில் வளர்ந்து, இன்று தம்பதிகளுக்கு இடையே பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.