புதுமணத்தம்பதி தனித்தனி அறையில் தூக்கிட்டு தற்கொலை..!!

திருவண்ணாமலையில் திருமணமான ஒன்றரை மாதத்தில் புதுமணத் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி அருகிலுள்ள மோத்தக்கல் கிராமத்தை சேர்ந்தவர் வேடியப்பன். இவருடைய மகன் ஜெயக்குமார் (24) டிப்ளமோ படித்துள்ளார்.

இவர் அடிக்கடி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா கல்லூர் கிராமத்திற்கு சென்று வந்த நிலையில், அங்கு விஜயா (23) என்ற ஆசிரியை பயிற்சி பெற்ற பெண்ணுடன் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இவர்களின் காதலுக்கு விஜயா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஜெயக்குமார் தனது பெற்றோருக்குத் தெரியாமல், கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு கோவிலில் வைத்து விஜயாவை திருமணம் செய்துள்ளார்.

பின்னர் கோட்டக்கல் கிராமத்திற்கு வந்து இருவரும் குடும்பம் நடத்தி வந்த நிலையில், விஜயா வீட்டில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால், இதனால் மனமுடைந்த இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்துள்ளனர்.

அதன்படி நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனித்தனி அறையில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் குறித்து பொலிசார் வழக்கும் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.