தாயைக் கட்டிப்பிடித்து ஈழத்து தர்ஷன் வெளியிட்ட புகைப்படம்… சாக்ஷி குழந்தையில் எப்படியிருந்தார்னு தெரியுமா?

பிக்பாஸ் வீட்டில் கவினைக் காதலிப்பதாகக் கூறி, ஈழத்து பெண் லொஸ்லியாவுடன் கடும் சண்டையிட்ட சாக்ஷி அகர்வால் தற்போது பயங்கர பிஸியாக இருந்து வருகின்றார்.

தற்போது சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் சாக்ஷி, கொரோனா லாக்டவுன் என்பதால் வீட்டில் இருப்பதோடு, பலவிதமான போட்டோஷாட்கள் எடுத்து வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று அன்னையர் தினம் என்பதால் பிரபலங்கள் தங்களது தாயுடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு வருகின்றனர். இதில் தர்ஷன் அவரது தாயுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

சாக்ஷி தனது சிறுவயது புகைப்படம் முதல் தற்போதுள்ள புகைப்படம் வரை அனைத்தையும் பகிர்ந்துள்ளார். சிறுவயதில் பயங்கர குண்டாக காணப்படும் புகைப்படமும் இதில் காணப்படுகின்றது.