கால நிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

நாட்டின் பல பாகங்களில் இன்று (11) பிற்பகல் அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும், களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும், 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும்.

அதேநேரம், மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப்பகுதிகளில் காலை வேளையில் இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கங்களில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்வதற்காக போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.