டெங்கு நோய் தொடர்பில் சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை!

எதிர்வரும் நாட்களில் டெங்கு நோய் பரவும் சாத்தியம் அதிகரிக்கலாமென சுகாதார பிரிவு எச்சரித்துள்ளது.

தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலையினால் வீடுகளில் அதிகளவானோர் இருப்பதன் காரணமாக இந்த பரவல் அதிகரிக்கலாம் என சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவக்காற்று மழையைத் தொடர்ந்து டெங்கு நோய் பரவும் சாத்தியம் அதிகம் உள்ளதாகவும், இக்காலப்பகுதியில் , டெங்கு குறித்து அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த வருடம் இதுவரை 18,835 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் ஜனவரியில் 11,595 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், கடந்த மாதத்தில் 383 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.