இலங்கைக்கு கரம் கொடுக்கும் அமெரிக்கா..!!

அமெரிக்க அரசாங்கத்தினால் இலங்கைக்கு 4.5 மில்லியனுக்கும் அதிகமான நிதியுதவியினை பெற்றுத்தருவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸினை இல்லாதொழிப்பதற்கு இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு உதவும் வகையிலேயே, இந்த நிதி வழங்கப்படவுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.