யாழில் சேவையில் ஈடுபட்ட அரச பேருந்து விபத்து!

காரைநகர் – யாழ்ப்பாணம் 782 வழித்தடத்தில் சேவையில் ஈடுபட்ட காரைநகர் சாலைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்ததில் நடத்துனர் காயமடைந்துள்ளார்.

இவ்விபத்து இன்று பிற்பகல் 3 மணியளவில் காரைநகர் – யாழ்ப்பாணம் வீதியில் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர் யாழ். போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை பயணிகளுக்கு பாதிப்புக்கள் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதன் காரணமாக பேருந்து சேவைகள் குறைக்கப்பட்ட நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே பயணிகள் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.