விஜய் தேவர கொண்டா செய்த மாஸான செயல்!

விஜய் தேவர கொண்டா தென்னிந்திய சினிமா ரசிகர்கள் பலரும் அதிகம் கேட்ட பெயர். அந்தளவுக்கு இவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அர்ஜூ ரெட்டி என்ற முதல் படத்தின் மூலமே இவர் முன்னணி நடிகராகிவிட்டார்.

சீக்கிரம் வளர்ச்சியை எட்டி வந்த இவருக்கு நோட்டா, வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் ஆகிய படங்கள் தோல்வி படங்களாக அமைந்தன. டியர் காம்ரேட் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதனால் இவர் லவ் சப்ஜெக்ட் படங்களில் நடிப்பதை வேண்டாம் என தவிர்த்துவிட்டார். பலருக்கும் உதவிகளை செய்து வரும் இவர் கோடையில் ஊர் முழுக்க அனைவருக்கும் ஐஸ்கீரிம் கொடுப்பது வழக்கம். இதை பலரும் கொரோனாவால் மிஸ் செய்கிறார்கள்.

இந்நிலையில் அவர் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள 2000 குடும்பங்களுக்கு உதவ ரூ 25 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.