கனடாவில் கொலைவெறி தாக்குதல்.. 17 பேர் பலி!!

இந்த உலகம் முழுவதும் கரோனா வைரஸின் தாக்கமானது பெருமளவு அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் கொத்து கொத்தாக பரிதாபமாக பலியாகி வருகின்றனர். இந்த நிலையில், மர்ம நபர் பொதுமக்களை வெறியுடன் சுட்டு கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனடா நாட்டில் இருக்கும் நோவா ஸ்காட்டா மாகாணத்தில் வாகன எரிபொருள் நிரப்பும் நிலையம் செயல்பட்டு கொண்டு இருந்துள்ளது. இந்த சமயத்தில், காவல் வாகனத்தில் வந்த மர்ம நபர், தனது துப்பாக்கியை எடுத்து மக்களை நோக்கி சரமாரியாக சுட்டு கொலை செய்துள்ளார்.

பின்னர் தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், துப்பாக்கிசூடு நடத்திய மர்ம நபரை சுட்டு கொலை செய்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தாக்குதல் நடத்திய நபர் காவல் துறை அதிகாரி போல வேடமிட்டு வந்ததும், இவனது பெயர் கேப்ரியல் வாட்மேன் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், பலமணிநேர போராட்டத்திற்கு பின்னர் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் முடிவிற்கு வந்துள்ளது. இந்த தாக்குதலில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.