சப்பாத்தி ரோல் செய்வது எப்படி ??

குழந்தைகளை சாப்பிட வைப்பது என்பது எவ்வளவு சிரமமான விஷயம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவர்களுக்கு பிடித்தமாதிரியான உணவுகளை சமைத்து கொடுக்கும் பொது தான் தெரியும் அவர்கள் வயிற்றில் இவ்வளவு இடமுள்ளதா என்று. குட்டீஸ்களுக்கு பிடித்த சப்பாத்தி ரோல் செய்வது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 2 கப்

சீரகம் – கால் டீஸ்பூன்

வெங்காயம் – 2

கேரட் – 1

உருளைக்கிழங்கு – 2

உப்பு,

மஞ்சள் தூள் –  கால் சிட்டிகை,

எண்ணெய், நெய் – தேவையான அளவு

மிளகாய் தூள் – கால் தேக்கரண்டி

குடைமிளகாய் – 1

ப.மிளகாய் – 2

கொத்தமல்லி – சிறிதளவு.

செய்முறை:

உருளை கிழங்கை நன்றாக வேகவைத்து தோல் உரித்து பிசைந்து எடுத்து கொள்ளவும்.

குடைமிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, கேரட் ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கோதுமை மாவில் உப்புத்தண்ணீர் சேர்த்து பிசைந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காயவைத்து அதில் சீரகம் கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம் பச்சமிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

பின்னர், கேரட், குடைமிளகாயை சேர்க்கவும். இதனுடன் சிறிது உப்பு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பிடித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை எடுத்து அதனுடன் கொட்டி நன்றாக கலக்கி கிளறவும். நல்ல வாசனை வந்த பிறகு இறக்கி வைக்கவும்.

பின், தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சப்பாத்தி மாவினை உருட்டி தேய்த்து கல்லில் போட்டு ணெய் சேர்த்து வேகவைத்து பிரட்டி இருபுறமும் நன்றாக வேகவைக்கவும்.

பின்னர் இந்த சப்பாத்தியின் மேல் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து அதனுடன் சேர்த்து செய்து சுருட்டி பரிமாறவும். இதனுடன் தக்காளி சாஸ் சேர்த்தால் இன்னமும் சுவையாக இருக்கும்.