மீண்டும் ரஜினியுடன் மோதும் அஜித்..!

தமிழ் திரையுலகில் டாப் கதாநாயகர்களாக திகழ்ந்து வருபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தல அஜித்.

இவர்கள் இருவரின் மடமும் சென்ற வருடம் பொங்கல் அன்று வெளிவந்திருந்தது. ஆம் ரஜினியின் பேட்ட படம் மற்றும் விஸ்வாசம்.

இந்த இரு படமும் மக்களிடையே மிக பெரிய ஆதரவை பெற்று மிக பெரிய வெற்றியடைந்தது, ஆனால் இதில் அஜித்தின் விஸ்வாசம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது கொரானாவால் அணைத்து படத்தின் படப்பிடிப்புகளும் தள்ளிப்போய் உள்ளது. இதனால் தற்போது தீபாவளிக்கு வெளிவர காத்திருந்த வலிமை படமும் அடுத்த வருடம் பொங்கலுக்கு தள்ளிப்போனது தகவல்கள் கசிந்துள்ளது.

மேலும் இதனை தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படமும் அடுத்த வருடம் பொங்கலுக்கு தான் வெளிவரும் என சில தகவல்கள் தெரிவந்துள்ளது.

இதனால் மீண்டும் இரு முன்னணி நட்சத்திரங்களின் படமும் ஒன்றாக வெளிவருகிறது. இதில் இம்முறை யார் பக்கம் வெற்றி என்று நாம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.