இத்தாலியில் பாலம் இடிந்து விழுந்து பயங்கர விபத்து..!

கொரோனா தீவிரத்திற்கு மத்தியில் இத்தாலியில் பாலம் ஒன்று இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லா ஸ்பீசியா நகரில் உள்ள பாலம் ஒன்றே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது.

விபத்தின் போது பாலத்தின் மேல் கார் ஒன்று பயணித்துக்கொண்டிருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

எனினும், கார் ஓட்டுநரின் நிலை குறித்து தற்போது வரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

உலகிலேயே கொரோனா தொற்றுநோய்க்கு இத்தாலியில் தான் அதிகமானோர் பலியாகியுள்ளனர், பலி எண்ணிக்கை 17,127 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.

ஊரடங்கு காரணமாக லா ஸ்பீசியா பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாக உள்ளுர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், பாலம் விபத்துக்குள்ளானதிற்கான காரணம் தற்போது வரை வெளியாகவில்லை.