கொரோனா ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு தொற்றிய சம்பவம் இலங்கையில் பதிவாகியது!

களுத்துறை, அதுலுகம பகுதியில் நேற்று முன்தினம் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருடைய தந்தை மற்றும் சகோதரியும் கொரோனா தொற்று சந்தேகத்தில் நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது அவர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டி சாரதியான இவருக்கு கொரோனா தொற்றியுள்ளதையடுத்து அந்த கிராமம் முழுதும் முழுமையாக மூடப்பட்டுள்ளது.