சுவையான காலி பிளவர் பஜ்ஜி செய்வது எப்படி ??

பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பும் குழந்தைகளுக்கும், வேலையில் இருந்து வரும் கணவருக்கும் மாலை சிற்றுண்டியாக இந்த காலி பிளவர் பஜ்ஜியை செய்து கொடுக்கலாம். மிகவும் சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

காலி பிளவர் – 8-10 துண்டுகள்
கடலை மாவு – 4-5 கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
இஞ்ஞிப்பூண்டு விழுது – ½ தேக்கரண்டி
மல்லித்தூள் – சிறிதளவு
மஞ்சள் தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் பொறிப்பதற்கு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மஞ்சள் தூள்,மிளகாய் தூள், மல்லித்தூள், இஞ்ஞிப்பூண்டு விழுது, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஓரளவு கெட்டியான பதத்திற்கு மாவை கரைத்துக் கொள்ளவும்.

காலி பிளவர் துண்டுகளை கரைத்த மாவில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

ஒரு வானலியில் எண்ணெயை காய வைத்து, மாவில் ஊற வைத்த காலி பிளவர் துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்கவும். தக்காளி சாஸ் உடன் சூடாக பரிமாறவும்.